வெளிநாட்டு மணல் விவகாரம்-ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு - Agnipuratchi

வெளிநாட்டு மணல் விவகாரம்-ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

Share This

வெளிநாட்டு இறக்குமதி மணலுக்கு பணம் செலுத்த 6 வார அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியதையடுத்து , 1 வார காலம் அவகாசத்தினை உச்சநீதிமன்றம் அளித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கால அவகாசம் அளி்த்தும் தமிழக அரசு பணத்தை செலுத்தாத ஏன்⁉ என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்த 55,000 டன் மணலை ஒரு டன் 2050 ரூபாய்க்கு என வாங்க ஏற்கனவே தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழக அரசு தற்போது ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றது. ஆனால் 55,000 டன்னுக்கான ரூ.11.27 கோடி தொகையினை நீதிமன்றத்தில் செலுத்தாததால், இது குறித்து விளக்கமளிக்க தூத்துக்குடி ஆட்சியர் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages