தெலுங்கானா தேர்தல் முன்னேற்பாடுகள்- தேர்தல் ஆணைய குழு வருகை - Agnipuratchi

தெலுங்கானா தேர்தல் முன்னேற்பாடுகள்- தேர்தல் ஆணைய குழு வருகை

Share This

தெலங்கானா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையக் குழு வரும் 11ஆம் தேதி அம்மாநிலத்திற்கு செல்கிறது. தெலுங்கானா சட்டப்பேரவைக்கான பதவிக்காலம், முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், நேற்று முன்தினம் பேரவை கலைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணையக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, தெலுங்கானாவில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, நேரடியாக ஆய்வு செய்ய துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழு ஐதராபாத் செல்கிறது. 11ஆம் தேதி ஆய்வு செய்யும் இக்குழு, தனது அறிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சமர்பிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையினை வைத்தே தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages