குட்கா விவகாரம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு - Agnipuratchi

குட்கா விவகாரம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

Share This

குட்கா விவகாரம் குறித்து அண்மையில் வருமான வரித்துறையினரை அடுத்து சி.பி.ஐ.யும் தனது சோதனையை மேற்கொண்டது. ஒரே நாளில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரை சி.பி.ஐ. கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்தது குறித்து தனது விசாரணையினை துவங்கியுள்ளது. இது குறித்து குட்கா அதிபர் மாதவனிடம் விசாரணையினை மேற்கொண்டுள்ள அமலாக்காத்துறை, ரூ.60 கோடி வரை சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இந்த குட்கா வழக்கில் சம்மந்தப்பட்ட முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் நேற்று நிருபர்களிடம் பேட்டியளிக்கையில் நான் பணம் எதுவும் பெறவில்லை. ஆனால் என்னுடைய பெயரை உபயோகப்படுத்தி நடந்த குற்றம் அது. அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages