கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சேல்விழி கிராமத்து விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்வதில் நாற்றங்கால் முறைக்கு பதிலாக கேப்சூல் முறையில் நெல் நடவில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக நாற்றங்கால் முறையில் நடவு செய்ய 30 கிலோ விதைநெல் தேவை. ஆனால் இந்த கேப்சூல் முறை நடவு முறையில் வெறும் 2600 கிராம் மட்டுமே போதும். அந்த கேப்ஸ்யூலில் இயற்கை முறையில் தயாரான வேப்பங்கொட்டை தூள், எரு, நுண்ணூட்ட சத்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை நிரப்பப்பட்டு நடவு செய்யப்படுகின்றன. இதனால் பயிற்களுக்கு தாக்கும் வேர் பூச்சி, நூற் பூச்சி தாக்குதல் இருக்காது. திருச்சியை சேர்ந்த ஒரு பொறியாளர் இந்த நடவு முறையினை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய முறை, நாற்றங்கால் நடவு முறையை விட அதிக மகசூல் கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
கேப்சூல் மூலம் நெல் நடவு பணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment