ரூ. 185 கோடி செலவில் புதிய ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு - Agnipuratchi

ரூ. 185 கோடி செலவில் புதிய ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Share This

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.185 கோடி செலவில் கடலோரக் காவல் படைக்கு புதிய ரோந்து கப்பல் ‘விஜயா’ கட்டப்பட்டது. 2100 டன் எடையும், 98 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் இந்த கப்பல் செல்லும். மேலும் இதில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, மாசு கட்டுப்பாட்டு கருவிகள், கண்காணிப்பு கருவிகள், அதிநவீன ரக துப்பாக்கிகள் என அனைத்து அம்சங்களும் உள்ளது. இந்நிலையில், புதிய ரோந்து கப்பல் ‘விஜயா’ நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று காலை சென்னை துறைமுகத்தில் நடந்தது. பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரோந்து கப்பல் ‘விஜயா’வை முறைப்படி நாட்டுக்கு அர்ப்பனித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages