குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டுகள் நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடைபெற்றது.
இதனிடையே டிஜிபி அலுவலகத்தில் தற்போது ரெய்டு துவங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றக்கூடிய காவல் துறையின் உச்சபட்ச பதவிதான் டிஜிபி என்பது. அந்த அலுவலகத்திலேயே முறைகேடு தொடர்பாக சிபிஐ ரெய்டு என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று.
தொடரும் சிபிஐ சோதனை.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், லட்சுமி நாராயணன், சிவக்குமார் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் குல்சார் பேகம், என்.கே.பாண்டியன், சேஷாத்ரி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன் ஆகியோரது வீடுகளிலும் சிபிஐ சோதனை.
No comments:
Post a Comment