மு.க.அழகிரி தலைமையிலான கருணாநிதி நினைவு அமைதிப் பேரணி 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியுள்ளது. இந்த பேரணிக்கு அழகிரி தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.
திமுக கட்சியிலிருந்து தன்னை நீக்கியதற்காக , அழகிரி தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருவல்லிக்கேணியில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி இன்று பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தார். இந்த பேரணியில் 1 லட்சத்துக்கும் மேலான ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்திருந்தார்.
திருவல்லிக்கேணி காவல் நிலைய சந்திப்பில் இருந்து கருணாநிதியின் நினைவிடத்துக்கு செல்லும் வழிகளில் பாதுகாப்பு காரணம் கருதி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment