சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவை, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நம் ஏந்தல் என்ற பகுதியில் எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி வேறு இடத்திற்கு அழைத்து சென்று ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். அவருடன் 10க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களையும் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக யோகேந்திர யாதவ் டுவிட்டரில் கூறுகையில், எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்கள் விடுத்த அழைப்பின்பேரில் அங்கு சென்றோம். விவசாயிகளை நாங்கள் சந்திப்பதை தடுத்ததுடன், போன்களை பறிமுதல் செய்தனர். வலுக்கட்டாயமாக எங்களை போலீசார் வேனில் இழுத்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், என்னையும், எனது குழுவினரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். நிலம் கையகபடுத்துதல் மற்றும் போலீஸ் தலையீடு குறித்த தகவல்களை மாவட்ட கலெக்டரிடம் போனில் கேட்டேன். ஆனால் அவர் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்" என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மக்களை சந்திக்க வந்த யோகேந்திர யாதவ் தடுத்து நிறுத்தம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment