சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து-3 பேர் பலி - Agnipuratchi

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து-3 பேர் பலி

Share This

சிவகாசியை அடுத்த காக்கிவாடன்பட்டியில் ராஜூ என்பவருக்குச் சொந்தமான கிருஷ்ணசாமி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை ஆலை வளாகத்தில் உள்ள குடோனில் அடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது திடிரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஊழியர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் 2 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தற்போதைய தகவல் தெரிவிக்கிறது. தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயணைக்கும் பணியில் உள்ள நிலையில், தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகே, உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேத நிலவரம் தெரியவரும் என்றும், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக அதிக அளவில் பட்டாசுகள் தயாரித்து வைத்திருப்பதால், சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விபத்துகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages