பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்-மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல் - Agnipuratchi

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்-மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்

Share This

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக இன்று காலை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பொறுப்பாளர்களுக்கு தனி பயிலரங்கம் நடந்து கொண்டு இருக்கிறது. சிறந்த அரசியல் அறிஞர்கள் அதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராகி கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை என்று தெரிவித்துள்ளார். மேலும், பேசிய அவர் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசையை கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவரை பா.ஜ.க.வினர் தாக்கி இருப்பது அரசியல் மாண்பு அல்ல என்றும், "மக்கள் கேள்வி கேட்பார்கள். கேட்டே ஆக வேண்டும் என்ற அந்த ஒரு மாண்பு தான் இந்திய அரசியலில் இருந்து வந்துள்ளது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages