நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்- உயர்நீதிமன்றம் அனுமதி - Agnipuratchi

நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்- உயர்நீதிமன்றம் அனுமதி

Share This

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் தினமும் ஆயிரத்து 259 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சர்வதேச ஒப்பந்த புள்ளிகளை கோரியது. இதற்கு தடை விதிக்க கோரி பிரான்சை சேர்ந்த சூயஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இரு நிறுவனங்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்த குடிநீர் வழங்கல் வாரியம், தற்போது கூடுதலாக ஒரு நிறுவனத்தை சேர்த்துள்ளதாக மனுதாரர் நிறுவனத்தின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, டெண்டர் நடவடிக்கைகளை தொடரவும், முடிவுகளை அறிவிக்கவும் அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், டெண்டர் ஒப்பந்தப் பணிகளை தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு வழங்க கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages