ஆதார் எண் கட்டாயம்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு - Agnipuratchi

ஆதார் எண் கட்டாயம்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Share This

தனிமனித சுதந்தரத்தில் தலையீடு என குற்றம் சாட்டப்பட்ட ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன் படி, தனி மனிதர்களின் அடையாளத்துக்கு ஆதார் கட்டாயம் என்றும், அரசு சேவைகளை பெற ஆதார் எண் நிச்சயம் வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் ஆதார் என்று வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் பெரும்பான்மையாக தீர்பளித்துள்ளனர்.

அரசு சேவைகளை பெற ஆதார் எண் அவசியம் தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதார் பயன்பட வேண்டும்- உச்ச நீதிமன்றம்.

வங்கிக் கணக்கு தொடங்க, மொபைல் எண் பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை.

ஆதார் இல்லை என்பதற்காக தனிநபர் உரிமைகளை மறுக்கக் கூடாது.

கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால் அதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது.

சிபிஎஸ்இ தேர்வு, நீட் தேர்வுக்கு ஆதாரை கட்டாயமாக்ககூடாது- உச்ச நீதிமன்றம்.

தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்டவிரோதம்- உச்ச நீதிமன்றம்.

தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப் படுத்தக்கூடாது - உச்சநீதிமன்றம்

99% மக்கள் ஆதார் பெற்றுவிட்டதால் அதனை தடைசெய்வது சரியல்ல - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆதார் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்னையாக உள்ளது - நீதிபதி ஏ.கே.சிக்ரி

சிறந்ததாக இருப்பதை விட தனித்துவமாக இருப்பதே மேல்
கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது

ஒருவருக்கு  கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது - நீதிபதி ஏ.கே.சிக்ரி

ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன - நீதிபதி ஏ கே சிக்ரி

ஆதார் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அடையாளத்தை வழங்கியிருக்கிறது. ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது என்பதால், அது மற்ற அடையாள சான்றுகளிலிருந்து வேறுபடுகிறது- ஏ.கே.சிக்ரி

எங்கு ஆதார் தேவை, எங்கு தேவையில்லை என்ற விவரங்கள் பின்வருமாறு

தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம்.

நீட், சி.பி.எஸ்.இ தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.

பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை.

வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண் இணைப்புக்கு ஆதார் எண் கட்டாயமில்லை.

ஆதார் இல்லை என்பதற்காக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், தனி நபர் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.

பான் அட்டை பெற ஆதார் எண் கட்டாயம்.

வருமான வரி தாக்கல்செய்ய ஆதார் அவசியம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages