தூத்துக்குடி துப்பாக்கிசூடு-உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி ஆணை - Agnipuratchi

தூத்துக்குடி துப்பாக்கிசூடு-உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி ஆணை

Share This

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அவரவர் தகுதிக்கேற்ப அரசு பணியும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, இழப்பீடு தொகையாக தலா 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் யாருக்கு அரசு வேலை வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர், காயமடைந்ததால் ஊனமுற்ற 9 பேர் உட்பட மொத்தம் 19 பேருக்கு அரசுப்பணிக்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages