இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்கிழமை) வருகிறது. இந்த பண்டிகையையொட்டி அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.
அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. நவம்பர் 3-ம் மற்றும் 4-ம் தேதியில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தினமும் சுமார் 1000 பேருந்துகள் இயக் கப்படுகின்றன. மற்றும் திருநெல் வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம் போன்ற போக்கு வரத்து கழகங்களைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன.
300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன.
No comments:
Post a Comment