பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் கைதான மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
நேற்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்தபோது, சோபியா, தனது கைகளை உயர்த்தி, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழிசை புகார் அளித்தார்.இதனடிப்படையில் சோபியா மீது மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து "நாட்டின்மீது அக்கறை இருப்பது அவசியம்தான். பொது இடங்களில் இனி இது போன்று பேசக்கூடாது" என மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் நீதிமன்றம் அறிவுரை கூறி நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியது.
No comments:
Post a Comment