பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பந்த் - Agnipuratchi

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பந்த்

Share This

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை கடும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 10ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும் அன்றைய தினம் பெட்ரோல் நிலையங்களுக்க முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கு எதிா்க்கட்சிகள் ஆதரவு தரவேண்டும் என்று கூறினர். நாடு தழுவிய இந்த போராட்டத்திற்கு, திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages