ஒப்பந்ததாரர் செய்யாதுரை அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு - Agnipuratchi

ஒப்பந்ததாரர் செய்யாதுரை அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு

Share This

அருப்புகோட்டையில் ஒப்பந்ததாரர் செய்யாதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செய்யாதுரைக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஜூலை 16ம் தேதி தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.170 கோடி ரூபாய் பணமும், 105 கிலோவுக்கும் மேலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ரெய்டு முடிவில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, அருப்புக்கோட்டையிலுள்ள செய்யாதுரைக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் அறையில் வைத்து பூட்டிசீல் வைத்து சென்றனர் அதிகாரிகள். தற்போது அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages