இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு - Agnipuratchi

இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

Share This

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு குருபூஜை விழா நடந்தது. இதனால் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் அங்கு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் அனுமதி பெற்று காலையிலேயே அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதே போல் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, தேமுதிக உள்ளிட்ட பல கட்சியினர் மரியாதை செலுத்தினார்கள். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages