நீதிமன்றங்களில் நடக்கும் முக்கிய வழக்குகள் நேரடி ஒளிபரப்பு-உச்சநீதிமன்றம் அனுமதி - Agnipuratchi

நீதிமன்றங்களில் நடக்கும் முக்கிய வழக்குகள் நேரடி ஒளிபரப்பு-உச்சநீதிமன்றம் அனுமதி

Share This

நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கிய வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் நடக்கும் அனைத்து வழக்குகளையும் நேரலை செய்ய வேண்டும் என இந்திரா தேசிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் எந்த ஆட்சேபணையும் கிடையாது. இந்த திட்டத்தை முதல் கட்டமாக கீழமை நீதிமன்றங்களில் செயல்படுத்தி பார்க்கலாம் எனக்கூறி, விரிவான அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த வழக்கிற்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சில கட்டுப்பாடுகளுடன் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதியளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages