பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் - Agnipuratchi

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல்

Share This

சொத்து குவிப்பு வழக்கில் கைதான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டனை கைதி இளவரசியிடம், சகோதரர் உடல்நிலை சரியில்லாமல் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை பார்ப்பதற்கு வரும்படியும் உறவினர் ஒருவர் சிறையில் இளவரசியை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார். அதை ஏற்ற இளவரசி தனது வக்கீல் மூலம் பரோல் மனுவை சிறைத்துறை எஸ்.பி சோமசேகரிடம் அளித்தார். இந்நிலையில் இளவரசிக்கு 15 நாள் பரோல் கிடைத்துள்ளது. இன்று மாலை சிறையிலிருந்து இளவரசி வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages