நாட்டின் முதல் அதிவேக ரயிலான ட்ரெயின் 18' சென்னையில் அறிமுகம் - Agnipuratchi

நாட்டின் முதல் அதிவேக ரயிலான ட்ரெயின் 18' சென்னையில் அறிமுகம்

Share This

இந்தியாவின் மிக அதிவேக ரயிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரெயின் 18 என்ஜின் இல்லாமல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியது. நாட்டின் அதிவேக ரயிலான 'சதாப்தி' விரைவு ரயிலின் சாதனையை முறியடித்து அதனை விட 15 சதவிகிதம் பயண நேரம் குறைவாக்க கூடிய ரயில் இது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. இந்த அதிவேக ரயிலின் அறிமுக விழா பெரம்பூரில் நடைபெற்றது. இதுகுறித்து பொறியாளர் உதயகுமார், சென்னையில் சோதனை ஓட்டங்கள் முடிந்தபிறகு இந்த ரயில் நவம்பர் 7ம் தேதி டெல்லி சென்றடையும். பிறகு மொராதாபாத்-பரேலி இடையிலும், கோடா - சவாய் மதோபூர் இடையிலும் சோதனை ஓட்டங்கள் நடைபெறும்" என்று கூறியுள்ளார். 
 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages