அயர்ன்மேன் டிரையத்லானின் போட்டிகளை முடித்து சாதனை படைத்த சென்னை பெண் - Agnipuratchi

அயர்ன்மேன் டிரையத்லானின் போட்டிகளை முடித்து சாதனை படைத்த சென்னை பெண்

Share This

உலகளவில் அயர்ன்மேன் போட்டிக்கான நிகழ்வுகளை உலக டிரையத்லான் கார்ப்பரேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் நடத்தப்படும் போட்டியில் 180கிலோமீட்டர் சைக்ளிங்க், 42கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம், 3.8 கிலோமீட்டர் நீச்சல் என மொத்தம் 17 மணி நேரத்திற்குள் இந்த சவால்களை ஏற்க வேண்டும். இதில் இந்தியா சார்பாக சென்னையை சேர்ந்த 33வயது ஆர்.வினோலி கலந்துகொண்டார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இது போன்ற சாகசங்களில் ஆர்வம் கொண்டு தன்னுடைய பணியினை விட்டுவிட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு திருமணம் ஆகி 2 வயதில் ஓர் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் கடந்த ஆண்டு கலந்துகொண்ட வினொலி 15மணிநேரம் 27 நிமிடங்களில் செய்து முடித்தார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் இந்த போட்டியில் கலந்துகொண்ட அவர் 14 மணிநேரம் 53 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages