தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 1ம் தேதி துவங்கும் - Agnipuratchi

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 1ம் தேதி துவங்கும்

Share This

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நவம்பர் 1 ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது. தித்லி, லூபன் புயல்கள் உருவானதால் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வேதாரண்யம் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages