தீபாவளி பட்டாசு வெடிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு - Agnipuratchi

தீபாவளி பட்டாசு வெடிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

Share This

தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. பட்டாசு விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசு மறு பரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. அதில், பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசுவெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் பட்டாசுகளை வெடித்தால் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடும் என்றும் தமிழக அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, பசுமை பட்டாசு என்றால் என்னஎன்று விளக்கம் அளிக்கக் கோரி தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் விசாரணை நாளை நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages