கிருஷ்ணகிரி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உள்பட 2 பேர் கைது. - Agnipuratchi

கிருஷ்ணகிரி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உள்பட 2 பேர் கைது.

Share This

கிருஷ்ணகிரி நகர துணை செயலாளராக இருப்பர் ஹரி என்கிற கணபதி. இவர் மற்றும் கோ-ஆப்ரடிவ் காலனி பகுதியை சேர்ந்த பைரவன் ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளயடித்துள்ளனர். இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சிவா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று அங்கு சாலையில் நின்று வாகனங்களை வழிமறித்து கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர துணை செயலாளர் ஹரி என்கிற கணபதி மற்றும் பைரவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 22 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages