நளினி சிதம்பரம் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு - Agnipuratchi

நளினி சிதம்பரம் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு

Share This

வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதில் கணக்கு காண்பிக்கவில்லை என வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக அளிக்கபட்ட விலக்கை வரும் நவம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் 5.37 கோடி ரூபாயும் அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் வாங்கியுள்ளனர். ஆனால் அவற்றை கணக்கில் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வருமான வரிதுறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages