ஐ.நா. மனித உரிமை அவையின் தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வு - Agnipuratchi

ஐ.நா. மனித உரிமை அவையின் தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வு

Share This

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று, அதில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கென ஐ.நா சபையில் மனித உரிமை அவையில் ஐந்து இடங்கள் உண்டு. இதற்காக இதர நாடுகள் உறுப்பினர்களிடையே நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மற்ற நாடுகளை விட அதிக ஆதரவை பெற்றுள்ளது. 188 வாக்குகளை பெற்றுள்ள இந்தியா வரும் 2019 ஜனவரி முதல் 3 ஆண்டுகளுக்கு அவையில் உறுப்பினராக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages