5 மாநிலங்களுக்கு தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இப்போது தமிழக இடைத் தேர்தல் கிடையாது-தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத். - Agnipuratchi

5 மாநிலங்களுக்கு தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இப்போது தமிழக இடைத் தேர்தல் கிடையாது-தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்.

Share This

சத்தீஸ்கர்,மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,தெலுங்கானா,மிசோரம்ஆகிய  5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை  தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்தார்
சத்தீஸ்கர் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதற்கட்டமாக  நவம்பர் 12-ல்தேதியும். இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 20-ம் தேதியும்.
மத்தியபிரதேசம், மிசோரமில் 28-ம் தேதியும்,ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7ஆம் தேதியும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும்.

கர்நாடகாவில் 3 சட்டமன்றத் தொகுதி 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும். 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெறும் என்றார்.

தமிழகத்திற்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க தமிழக அரசு கேட்டுகொண்டதால், இப்போது அறிவிப்பு இல்லை - தேர்தல் ஆணையம்.

வானிலை நிலவரங்கள் காரணம் காட்டி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் தேதியை இப்போது அறிவிக்க முடியாது.

வாக்கு எண்ணிக்கை!

5 மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 11ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages