தமிழகத்தில் தொடர் கனமழை எதிரொலி-6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - Agnipuratchi

தமிழகத்தில் தொடர் கனமழை எதிரொலி-6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Share This

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதல், மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக சென்னை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages