பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடுதிருமதி. சௌமியா அன்புமணி, தலைவர், பசுமைத் தாயகம் வேண்டுகோல். - Agnipuratchi

பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடுதிருமதி. சௌமியா அன்புமணி, தலைவர், பசுமைத் தாயகம் வேண்டுகோல்.

Share This

அன்புடையீர், வணக்கம்

அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்தநாள் முதல் "பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு" (PLASTIC FREE TAMIL NADU) பிரச்சாரத்தை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத் தாயகம் ஒரு தொடர் பிரச்சாரமாக நடத்துகிறது.

இதனை முன்னிட்டு - கீழே உள்ள பிரச்சாரக் கருத்துகளை டிவிட்டரிலும் முகநூலிலும் பரப்ப வேண்டுகிறோம்.

இந்தக் கருத்துகளில் ஓரிரு வாசகங்களை அப்படியே ஒவ்வொரு கருத்தாக டிவிட்டரில் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடுங்கள். முடிந்தவர்கள் - இந்த வாசகங்களில் ஒரு சில வரிகளை மாற்றி வெளியிடுவது மிகவும் நல்லது.

தயவுசெய்து PlasticFreeTN எனும் ஹாஷ் டாக்கை முதன்மையாக பயன்படுத்துங்கள். இது பசுமைத் தாயகம் நடத்தும் பிரச்சாரத்தின் வாசகம் ஆகும். மேலும், முடிந்த இடங்களில் #BeatPlasticPollution எனும் ஹாஷ் டாக்கை இரண்டாவதாக பயன்படுத்துங்கள். இது ஐநா அவையின் பிரச்சார வாசகம் ஆகும்.

காந்தி பிறந்தநாள் என்பதால் GandhiAt150 MahatmaGandhi ஹாஷ் டாக்கை இணைக்கலாம்.

மேலும், PlasticFreeTN எனும் ஹாஷ் டாக் டிவீட்டுகளை படித்து, அவற்றை Retweet செய்யுங்கள்.

இந்த பிரச்சாரத்தை 2.10.2018 காலை 10 மணி முதல் செய்யுங்கள். அதற்கு முன்பாக வேண்டாம்.

மிக்க நன்றி.

ஐநா அவை 2018 ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்திலிருந்து பிளாஸ்டிக் தடையை முன்னிலைப்படுத்தி வருகிறது. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத் தாயகம் இதற்காக 15 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்துவருகிறது.

PlasticFreeTN BeatPlasticPollution GandhiAt150 MahatmaGandhi

2019 ஜனவரி 1 முதல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது! மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத் தாயகம் தடையை வரவேற்கிறது.

PlasticFreeTN BeatPlasticPollution GandhiAt150 MahatmaGandhi

பிளாஸ்டிக் பை சராசரியாக 12 நிமிடங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பின்னர் குப்பையாக வீசி எறியப்படுகிறது. ஆனால், அது 1000 வருடங்களுக்கு அழியாமல் இருந்து சுற்றுச்சூழலை கெடுக்கக் கூடியது.

https://goo.gl/xJoW2y

PlasticFreeTN BeatPlasticPollution GandhiAt150 MahatmaGandhi

உலகில் கடந்த 70 ஆண்டுகளில் 830 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது நூறு கோடி யானைகளுக்கு ஈடான அளவாகும்! பிளாஸ்டிக் தடையை ஆதரிப்போம்.  https://goo.gl/xJoW2

PlasticFreeTN #BeatPlasticPollution GandhiAt150 #MahatmaGandhi

உலகில் பயன்படுத்தப்பட்ட 830 கோடி டன் பிளாஸ்டிகில் வெறும் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன. 12% எரிக்கப்பட்டது. மீதமுள்ள 79 % பிளாஸ்டிக் (690 கோடி டன்) குப்பையில் வீசப்பட்டுள்ளது. அவை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு இயற்கையை சீர்ழித்துக்கொண்டே நீடித்திருக்கும். #PlasticFreeTN

தற்போது ஆண்டுக்கு 33 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை நிலத்திலும் நீரிலும் வீசப்படுகிறது. இது ஒட்டுமொத்த உலக மக்களின் எடைக்கு சமமான அளவாகும். பிளாஸ்டிக் தடையை ஆதரிப்போம்.

பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி:https://goo.gl/ehbXGT

PlasticFreeTN BeatPlasticPollution MahatmaGandhi

உலகில் ஒரு ஆண்டில் 5 லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி தூக்கி எறியப்படுகின்றன. அவற்றில் 1% கூட மறுசுழற்சி செய்யப்படுவது இல்லை. பிளாஸ்டிக் தடையை ஆதரிப்போம். PlasticFreeTN BeatPlasticPollution https://goo.gl/xJoW2பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி:https://goo.gl/ehbXGT

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 25,940 டன் பிளாஸ்டிக் குப்பையில் வீசப்படுகிறது. சென்னை மாநகரில் மட்டும் தினமும் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பை 429 டன் ஆகும்! PlasticFreeTN BeatPlasticPollution விரிவாக:https://goo.gl/xJoW2 பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி: https://goo.gl/ehbXGT

நகரங்களில் சாக்கடைகள் அடைப்புக்கும், மழைக்கால வெள்ள பாதிப்புக்கும் பிளாஸ்டிக் பைகள் முதன்மை காரணமாக உள்ளன. விரிவாக: https://goo.gl/xJoW2பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி:https://goo.gl/ehbXGT

PlasticFreeTN #BeatPlasticPollution GandhiAt150 #MahatmaGandhi

ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீர் என அனைத்து நீர்வள மாசுபாட்டிற்கும் பிளாஸ்டிக் பைகள் முக்கிய காரணம் ஆகும். விரிவாக:https://goo.gl/xJoW2 பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி: https://goo.gl/ehbXGT

PlasticFreeTN #BeatPlasticPollution GandhiAt150 #MahatmaGandhi

பிளாஸ்டிக் பைகளை தின்று கால்நடைகள், வனவிலங்குகள் ஏராளமாக இறக்கின்றன. கடல்வாழ் திமிங்கலங்கள், சீல்கள் சாகின்றன. பறவைகள் அழிகின்றன. விரிவாக:https://goo.gl/xJoW2 பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி: https://goo.gl/ehbXGT

PlasticFreeTN #BeatPlasticPollution MahatmaGandhi

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் சிறு துண்டுகளாக மாறி உயிரினங்களை பாதிக்கிறது, மீன்களின் உடலிலும் நுண் பிளாஸ்டிக் கலக்கிறது. இதனால், மீனும் நஞ்சாக மாறுகிறது. #PlasticFreeTN #BeatPlasticPollution விரிவாக: https://goo.gl/xJoW2பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி:https://goo.gl/ehbXGT

பிளாஸ்டிக் தயாரிப்பால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோலியத்திலிருந்து 99% பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 6% இதற்காக செலவிடப்படுகிறது. விரிவாக:https://goo.gl/xJoW2

PlasticFreeTN #BeatPlasticPollution GandhiAt150 #MahatmaGandhi

காலநிலை மாற்றத்துக்கு பிளாஸ்டிக் ஒரு காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் குப்பையில் இருந்து புவி வெப்பமடையக் காரணமான மாசுக்காற்று தொடர்ச்சியாக வெளியாகிறது. #PlasticFreeTN #BeatPlasticPollution விரிவாக:https://goo.gl/xJoW2 பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி: https://goo.gl/ehbXGT

டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசு உற்பத்திக்கு பிளாஸ்டிக் முதன்மைக் காரணம் ஆகும். விரிவாக:https://goo.gl/xJoW2 பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி: https://goo.gl/ehbXGT

PlasticFreeTN #BeatPlasticPollution GandhiAt150 #MahatmaGandhi

பிளாஸ்டிக் பைகள் அணுகுண்டுகளை விட ஆபத்தானவை என இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. விரிவாக: https://goo.gl/xJoW2பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி:https://goo.gl/ehbXGT

PlasticFreeTN #BeatPlasticPollution GandhiAt150 #MahatmaGandhi

தமிழ்நாடு அரசு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் (throw away plastic) பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது. இந்த தடை 1.1.2019 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. விரிவாக: https://goo.gl/xJoW2 

PlasticFreeTN BeatPlasticPollution

MahatmaGandhi

சுற்றுச்சூழலையும், எதிர்காலத்தையும் காப்பாற்றும், தமிழ்நாடு அரசின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடையை அனைவரும் வரவேற்று முழுமையாக செயல்படுத்த வேண்டும். #PlasticFreeTN #BeatPlasticPollution விரிவாக: https://goo.gl/xJoW2பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி:https://goo.gl/ehbXGT

1.1.2019 முதல் தடை விதிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் (Part 1/3):

பாலித்தீன் பை (கேரி பேக்) எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும்" அனைத்து வகை பிளாஸ்டிக் பை,

உணவுப் பொருட்களை கட்ட பயப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்

PlasticFreeTN #BeatPlasticPollution

1.1.2019 முதல் தடை விதிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் (Part 2/3):

உணவக மேசை விரிப்பாக பயன்படும் பிளாஸ்டிக் தாள்.

பிளாஸ்டிக் தெர்மக்கோல் தட்டுகள், தெர்மக்கோல் குவளைகள்.

பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டு, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளை #PlasticFreeTN #BeatPlasticPollution

1.1.2019 முதல் தடை விதிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் (Part 3/3):

பிளாஸ்டிக் குவளை, பிளாஸ்டிக் தேநீர் குவளை.

பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள்,

பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்,

பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்,

பிளாஸ்டிக் கொடிகள்,

PlasticFreeTN #BeatPlasticPollution

1.1.2019 முதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தடிமண் அளவு எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் தமிழ்நாட்டில் தடைசெய்யப்படுகின்றன.

விரிவாக: https://goo.gl/xJoW2 

PlasticFreeTN #BeatPlasticPollution MahatmaGandhi

மறுசுழற்சி பை என்கிற பெயரில் அளிக்கப்படும், பிளாஸ்டிக் கலந்த பைகளும் 1.1.2019 முதல் தடைசெய்யப்பட்டவையே ஆகும். துணிப் பை போன்று தோற்றமளிக்கும் 'நான்-வோவென் பைகள் (non woven polypropylene bags)' பிளாஸ்டிக் தான். அவற்றையும் தவிர்க்க வேண்டும். #PlasticFreeTN #BeatPlasticPollution

தமிழ்நாட்டில் 1.1.2019 முதல் பிளாஸ்டிக் தடை: நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1/3. நீங்கள் தனிப்பட்ட அளவிலும் உங்கள் வீட்டிலும் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க உறுதி எடுங்கள்.https://goo.gl/ehbXGT

PlasticFreeTN #BeatPlasticPollution

தமிழ்நாட்டில் 1.1.2019 முதல் பிளாஸ்டிக் தடை: நீங்கள் என்ன செய்ய வேண்டும்

2/3. அலுவலகம், நிறுவனம், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, குடியிருப்பு அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பதற்கான ஆதரவை திரட்டுங்கள். https://goo.gl/55bko4

PlasticFreeTN #BeatPlasticPollution 

தமிழ்நாட்டில் 1.1.2019 முதல் பிளாஸ்டிக் தடை: நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

3/3. தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை முழுமையாக செயல்படுத்த தமிழ்நாடு அரசினையும் உள்ளாட்சி அமைப்புகளையும் வலியுறுத்துங்கள்.

PlasticFreeTN #BeatPlasticPollution

உங்கள் பகுதியை - பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற இன்றே பசுமைத் தாயகம் அமைப்பினை தொடர்பு கொள்ளுங்கள்:

உறுதிமொழி படிவம்:https://goo.gl/ehbXGT

பிளாஸ்டிக் இல்லா பகுத : https://goo.gl/55bko4

துண்டுப்பிரசுரம்:  https://goo.gl/4h4ucC

PlasticFreeTN #BeatPlasticPollution 

உடல்நலம், சுற்றுச்சூழல், நீர்வளம், நிலவளம், உயிரினங்கள் என அனைத்தையும் கடுமையாக பாதிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கப்படுவது வரவேற்க தக்கதாகும்.

PlasticFreeTN #BeatPlasticPollution #MahatmaGandhi #GandhiAt150

பிளாஸ்டிக் தடை  முறையாக செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மேம்படும். வெள்ளப்பெருக்கும் சாக்கடை அடைப்பும் குறையும். பொது இடங்கள் தூய்மையாகும்.

உறுதிமொழி படிவம்:https://goo.gl/ehbXGT

பிளாஸ்டிக் தடை முறையாக செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் குழந்தைகள், சிறுவர்களின் ஆரோக்கியம் மேம்படும். கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோய்கள் குறையும். உணவு நஞ்சாவது குறையும்.

உறுதிமொழி படிவம்:https://goo.gl/ehbXGT

பிளாஸ்டிக் தடை முறையாக செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் காப்பாற்றப்படும். வன விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் காப்பாற்றப்பட வழிசெய்யும்.

உறுதிமொழி படிவம்:https://goo.gl/ehbXGT

PlasticFreeTN #BeatPlasticPollution MahatmaGandhi #GandhiAt150

பிளாஸ்டிக் தடை முறையாக செயல்படுத்தப்பட்டால், காகிதப்பை, துணிப்பை, இயற்கை பொருட்கள், மட்பாண்டம் மாற்று பொருட்களின் தேவை அதிகரிப்பதால் பொருளாதாரம் உயரும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

உறுதிமொழி படிவம்:https://goo.gl/ehbXGT


 


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages