சாக்கடையில் இறங்கி தூர்வாரிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி - Agnipuratchi

சாக்கடையில் இறங்கி தூர்வாரிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Share This

புதுச்சேரியில், "தூய்மையே சேவை" துப்புரவுப் பணியை, முதலமைச்சர் நாராயணசாமி, தனது தொகுதியான நெல்லித்தோப்புக்கு உட்பட்ட சாரம் சந்தை பகுதியில் தொடங்கி வைத்தார். அப்போது தூய்மைப் பணியை ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி மார்க்கெட் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததைக் கண்டார். உடனே சற்றும் யோசிக்காமல், அருகில் இருந்த ஊழியர்களிடம் இருந்து மண்வெட்டியை வாங்கி கையுறை மட்டும் அணிந்து கொண்டார். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர் வாரும் பணியை மேற்கொண்டார். அங்கிருந்த அடைப்பை அகற்றியப்பின்னே அவர் மேலே ஏறி வந்தார். இவரது இந்த செயல் அங்கிருந்தோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதோ அதன் வீடியோ பதிவு👇 
📹 http://v.duta.us/mdo7TAAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages