தமிழகத்திற்கு விடப்பட்ட 'ரெட் அலர்ட்' வாபஸ் - Agnipuratchi

தமிழகத்திற்கு விடப்பட்ட 'ரெட் அலர்ட்' வாபஸ்

Share This

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது, "கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் குமரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுடிருந்தது. அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி ஓமன் நோக்கி நகர்ந்து விடும் என்பதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் அக்டோபர் 8ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் எனவும், குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages