ஊரகவளர்ச்சித்துறையின் புதுகோட்டை மாவட்ட திட்ட இயக்குனரை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
மாவட்ட ஊரகவளர்ச்சி திட்ட இயக்குனர்சந்தோஷ்குமாரின் ஊழியர் விரோதபோக்கினால் , துறை ஊழியர்கள் கடும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.எனவே இவரை துறைசாராத வேறுபணிக்கு அனுப்பவேண்டும்.அரசு திட்டபணிகளை நிறைவேற்ற நெருக்கடி கொடுப்பதை கைவிட்டு உரிய கால அவகாசம் வழங்கவேண்டும்.வளர்ச்சி துறை பணிகளை பிறதுறை அலுவலர்களை கொண்டு கள ஆய்வுக்குட்படுத்துவதை கைவிடவேண்டும்.இரவு நேர விடுமுறை தினங்களில் ஆய்வுகள் மற்றும் ஆய்வுகூட்டம் நடத்துவதை கைவிடவேண்டும்.கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களில் நூறுநாள் வேலை திட்ட செயல்பாடுகளில் அம்மாவட்ட ஊழியர்கள் மீது தொடரப்பட்டுள்ள ஒழுங்க நடவடிக்கைகளை கைவிடவேண்டும். மகளீர் திட்டத்தில் அரசாணை எண் :118 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நாள் 2018, செப்டம்பர் 4 ,ம் தேதியன்று மூலமாக, மாவட்டங்களில் நீக்கப்பட்ட 31,ஊரக வளர்ச்சி துறை உதவித்திட்ட அலுவலர் பணியிடங்களை மீண்டும்வழங்கவேண்டும்.மேலும் வட்டார மேலாளர் பணியிடங்களை துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்நிலை பணியிடமாக மாற்றிஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் மூலம் நிரப்பவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாநிலசெயற்குழு உறுப்பினர்ஆர்.விமலன் தலைமைவகித்தார். மாவட்டசெயலாளர் சா.இளங்குமரன் கோரிக்கையை விளக்கிபேசினார். தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாவட்டதலைவர் எம்.சுருளிநாதன்,மாவட்டசெயலாளர் ஏ.சேகர், தமிழ்நாடு மோட்டார் வாகன பாராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநிலபொருளாளர் கே.புகழேந்தி,தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுபணியாளர் சங்க மாநிலதுணைதலைவர் எம்.யோகராசு,தமிழ்நாடு சத்துணவு ஊழியர்சங்க மாவட்டசெயலாளர் சி.காவேரி,ஆகியோர் வாழ்த்திபேசினர்.
No comments:
Post a Comment