காதலி பிறந்த நாளின்போது காதலியை சுட்டுக் கொன்ற காதலன் தற்கொலை! - Agnipuratchi

காதலி பிறந்த நாளின்போது காதலியை சுட்டுக் கொன்ற காதலன் தற்கொலை!

Share This

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்தில் பிறந்த நாளின்போது காதலியை சுட்டுக் கொன்ற காதலன் தானும் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தை சேர்ந்த கார்த்திக்வேல், பேஸ்புக் மூலம், அன்னியூரை சேர்ந்த சரஸ்வதியை காதலித்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் சரஸ்வதி, 3ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், கார்த்திக்வேல், சென்னையில் காவலராக பணியாற்றி வந்தார். முதலில் இருவரும் காதலித்த நிலையில் மருத்துவப் படிப்புக்குப் பிறகு சரஸ்வதியிடம் மாற்றம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதியின் பிறந்தநாளான இன்று, வாழ்த்து சொல்ல வந்த கார்த்திக்வேல் சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages