யார் இந்த ரன்வீர் ஷா? - Agnipuratchi

யார் இந்த ரன்வீர் ஷா?

Share This

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா ஒரு சமூக ஆர்வளர். 1981 இல் முதலில் சென்னைக்கு வந்த ரன்வீர் இயக்குனராக அறிமுகமானார், பின் 1997 ஆம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்சார கனவு என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தவர். பின் சில காரணங்களால் சினிவாவில் இருந்து வெளிவந்து, 1998 ஆம் ஆண்டில் சென்னையில் “பிரகிருதி அறக்கட்டளை”யினை ரன்வீர் உருவாக்கினார். இது கலாச்சார பாரம்பரியம் மற்றும் பரம்பரை பற்றிய அரங்கேற்றங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரன்வீர் ஷாவுக்கு சொந்தமாக ஒரு சக்கரை ஆலை உள்ளது. இந்தியா & இந்தியா என்ற பெயரில் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை பொங்களூரில் நடத்தி வருகிறார். மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் பி.எஸ் அப்பாரல்ஸ் (apparels) என்னும் ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார் ரன்வீர் ஷா. மும்பையில் பிறந்த இவர் சென்னையில் கடந்த 20 வருடமாக ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் அவர் சிலைகளை கடத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆடை ஏற்றுமதி தொழில் செய்வதன் மூலமாக சிலைகளை கடத்தி வெளிநாட்டிற்கு விற்று வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இவரை காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் 6 லாரிகளில் ஏற்றி செல்லும் அளவிற்கு அவரின் வீட்டில் சிலைகளை கடத்தி குவித்து வைக்கப்பட்டு இருந்தது சோதனையில் தெரிய வந்தது. இதுவரை நடந்த சிலை கடத்தல் சோதனையில் ரன்வீர்ஷா வீட்டில்தான் நிறைய கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages