சிபிஐ'க்கு புதிய இயக்குநர் நியமனம்-மத்திய அரசு உத்தரவு - Agnipuratchi

சிபிஐ'க்கு புதிய இயக்குநர் நியமனம்-மத்திய அரசு உத்தரவு

Share This

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே அண்மைக் காலமாக மோதல் நிலவிவருகிறது. தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கை முடித்துத் தருவதற்கு அலோக் வர்மா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார். அவர் மீது பதிலுக்கு அலோக் வர்மாவும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனை அடுத்து அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி சம்மன் அனுப்பியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்நிலையில் லஞ்சப் புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குநர் ஆலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளித்து, சிபிஐயின் புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை தாற்காலிகமாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages