ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை கோரி தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் 'மருத்துவ சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்து விற்கப்படும் பட்சத்தில் காலாவதியான அல்லது போலி மருந்துகள் விற்க வாய்ப்புகள் அதிகம் உள்ள பட்சத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்' என்று கூறப்பட்டிருந்தது. மேலும், மருந்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் மருத்துவர் பரிந்துரை செய்யவேண்டும் என விதி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனையடுத்து நீதிபதி, ஆன்லைனில் மருந்து, மாத்திரைகள் விற்க 2 வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு⚖ வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் மருந்தகங்களுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment