நவம்பர் மாதம் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தலைநகர் சென்னையில் வசித்து வரும் வெளியூர்வாசிகள் நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் தத்தம் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இந்நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி அதிக அளவிலான பயணிகள் வெளியூர் செல்ல கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு பயணிப்பார்கள் என்ற காரணத்தால், வழக்கமாக 10 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிவரை இயக்கப்படும். அதோடு நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment