கிழக்கு கடற்கரை சாலை -வளைவுகளில் விபத்தை தடுக்க புது யுக்தி - Agnipuratchi

கிழக்கு கடற்கரை சாலை -வளைவுகளில் விபத்தை தடுக்க புது யுக்தி

Share This

சென்னை-பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கடம்பாக்கம்-மரக்காணம் இடையே பனையூர் குப்பம் அருகே உள்ள 300 மீட்டர் நெடுவளைவு ஒன்றில் சீனா நாட்டில் சாலை விபத்தை தடுக்க பயன்படுத்தப்படும் நைலான் சேப்டி ரோலர் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி நவீன வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடன் 1000க்கும் மேற்பட்ட நைலான் ரோலர்களை கொண்டு சாலை தடுப்பு அமைத்துள்ளனர். இந்த தடுப்புகள் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வரும் வாகனங்கள் மோதினால் விபத்து மற்றும் சேதமின்றி பாதுகாப்பாக திருப்பி விடுகிறது. தற்போது கிழக்கு கடற் கரை சாலையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் இந்த தொழில் நுட்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுக்க இது போன்ற ரோலர்களை பயன்படுத்த மக்கள் தற்போது கோரிக்கை வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages