ஐ.நா.,வின் சுற்றுச்சூழலுக்கான விருதினை வென்ற பிரதமர் மோடி பேச்சு - Agnipuratchi

ஐ.நா.,வின் சுற்றுச்சூழலுக்கான விருதினை வென்ற பிரதமர் மோடி பேச்சு

Share This

சர்வதேச சூரிய ஒளி மின்சாரத்திற்கான கூட்டமைப்பை உருவாக்கியது, ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை 2022 ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாற்றி அமைப்பதற்கான 6 சாதனைகளுக்காக பிரதமர் மோடிக்கு கொள்கை அடிப்படையிலான தலைமை என்ற பிரிவின் கீழ் 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்' விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.,வின் உயரிய விருதினை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார். இந்த விழாவில் பேசிய மோடி கூறுகையில் இது எனக்கு கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. இது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம். இந்த விருதை ஒவ்வொரு இந்தியனுக்கும் அர்ப்பணிக்கிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியர்கள் உறுதி பூண்டுள்ளனர். 125 கோடி இந்தியர்களால் தான் இந்த விருது சாத்தியமாகி உள்ளது" என்று தெரிவித்தார். 
 
 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages