தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரத்து 400 ரூபாய் தீபாவளி போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாயும் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3.58 லட்சம் பேர் பயன்பெறுவர். லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம், நஷ்டம் அடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம், மின்சார வாரியம், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிய கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் என்று வகுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சி மற்றும் டி பிரிவினர், சென்னை குடிநீர் வழங்கல் வாரிய சி, டி பிரிவு ஆகிய ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்-முதல்வர் அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment