ஈரானுடான எண்ணெய் இறக்குமதி தொடரும் -மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - Agnipuratchi

ஈரானுடான எண்ணெய் இறக்குமதி தொடரும் -மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Share This

டெல்லியில் நடைபெற்ற எரிசக்தித்துறை கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஈரான் மீது அமெரிக்க பொருளாதார தடைகளை விதித்த போதிலும், இந்தியாவின் உள்நாட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால் ஈரானுடான எண்ணெய் இறக்குமதி தொடரும் என்று கூறினார். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானில் இருந்து எண்ணெய் வாங்குவதால், பொருளாதாரத் தடைகளில் இருந்து அமெரிக்காவிடமிருந்து விலக்கு பெற முடியுமா இல்லையா என்பது தெரியாது என்றும் இந்த நடவடிக்கை இந்தியாவின் வலிமையும் புதிய தலைமையையும் காட்டுவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் 'உலகளாவிய தலைவர்கள் எங்கள் தேவைகளை புரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages