மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர்.
Watch:- https://youtu.be/RJmwxYIlsiY
இந்த நிகழ்வைப் பற்றி அறிந்த ரசிகர்கள் நடிகர் சிவக்குமாரைக் காண, பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர். திறப்பு விழாவுக்காக உள்ளே சிரித்த முகமாக வந்தார் சிவக்குமார்.
அங்கு ஒரு ரசிகர் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதைக் கண்டதும், திடீரென அவரது மொபைலை தட்டிவிட்டார். இந்த வீடியோ காலையில் இருந்து இணையம் எங்கும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment