சபரிமலை கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது -பத்திரிகையாளர்கள் வெளியேறுமாறு உத்தரவு - Agnipuratchi

சபரிமலை கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது -பத்திரிகையாளர்கள் வெளியேறுமாறு உத்தரவு

Share This

எல்லா வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்னர் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் போராட்டம் காரணமாக 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே கோவிலின் ஐதீகத்திற்கு எதிராக பெண்கள் அனுமதிக்கப்பட்டால் கோவிலை மூடிவிடுவோம் என அரசுக்கு கோவில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. இதற்கான மேல்முறையீட்டிற்கான மனுவினை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா⁉ என்பது நாளை கூறப்படும் தீர்ப்பில் தெரியவரும் நிலையில், 17-ம் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது. பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் உள்ள ஊடகவியலாளர்கள் மீது கடைசி நாளில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி அவர்கள் அங்கிருந்து செல்லுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages