கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு-பிஷப்புக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம் - Agnipuratchi

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு-பிஷப்புக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்

Share This

பிராங்கோ கேரளத்தில் பணியாற்றியபோது தன்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கன்னியாஸ்திரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து பிராங்கோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின், பின்பு பெயிலில் வெளிவந்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ளார். பிராங்கோ மீது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுத் தெரிவிப்பதற்கு உதவியதாகக் கூறப்பட்டது. அவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த பாதிரியார் பிராங்கோவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் பலர் தன்னிடம் புகார் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதனால் தனக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் குரியகோஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜலந்தர் மாவட்டத்தில் போக்பூரில் உள்ள தேவாலயத்தில் தனது அறையில் பாதிரியார் குரியாக்கோஸ் இறந்து கிடந்தார். பிராங்கோவுக்கு எதிரான சாட்சியம் என்பதால் குரியாக்கோஸ் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரின் சகோதரர் ஜோஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages