ஆந்திராவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரெயில்வே ஊழியர்கள் சிலர் பணம் வைத்து சூதாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
தினமும் ஆந்திர மாநிலம் காக்கி நாடா துறைமுகத்தில் இருந்து சென்னை கடற்கரை வழியாக செங்கல்பட்டு வந்து செல்லும் விரைவு ரெயிலில் தான் நடக்கிறது பகிரங்க சூதாட்டம்..!
அரக்கோணத்தில் ஏறும் இவர்கள் லக்கேஜ் வைத்திருக்கும் பெட்டியில் ஒன்று கூடுகிறார்கள். அங்கிருக்கும் பயணிகளை மிரட்டி கீழே இறக்கி விடும் இவர்கள் ரெயிலுக்கே தாங்கள் தான் ஓனர் போல நடந்து கொள்வதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அன்றைய தினசரி நாளிதழை பிரித்து பெட்டியில் விரித்து சீட்டாட்டத்தை தொடங்கும் இவர்களின் அட்டூழியத்தின் உச்சம் தான் இந்த காட்சி... ஓடும் ரெயிலில் விதியை மீறி பகிரங்கமாக சிகரெட் பிடிக்கும் இவர், அந்த தீக்குச்சியை உள்ளேயே வீசுகிறார் இது போன்ற மெத்தனமான சம்பவங்கள் தான் மிகப் பெரிய தீவிபத்துக்கள் நிகழ காரணமாகிவிடுகிறது என்பதை இவரும் உடன் இருக்கும் ரெயில்வே ஊழியர்களும் உணரவில்லை..!
https://youtu.be/JqA1_KdZo_M
பெரம்பூர் லோகோ வரை ரெயிலில் பயணிக்கும் இவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த வழிதடம் மட்டுமல்ல தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் ஏறிக்கொண்டு ஓசி பயணம் மேற்கொள்ளும் ரெயில்வே ஊழியர்கள் சிலர், பயணிகளை அதிகாரம் செலுத்துவது தொடரவே செய்கிறது.
இவர்கள் மீது தென்னக ரயில்வே தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பணம் கொடுத்து பயணிப்போரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment