இந்துக்களின் புனித ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக அன்றைய நாட்களில் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அதன்படி, மகாளய அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து, முப்பெரும் தேவியரை வணங்கும் நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி பண்டிகை சரஸ்வதி பூஜையுடன் முடியும். நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மகாளய அமாவாசை-பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அர்ப்பணிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment