ரன்வீா் ஷாவுக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினா் சம்மன் - Agnipuratchi

ரன்வீா் ஷாவுக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினா் சம்மன்

Share This

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினா் அண்மையில் நடத்திய தேடுதல் வேட்டையில் தொழில் அதிபா் ரன்வீா் ஷாவின் வீடு உட்பட 3 இடங்களில் இருந்து சிலைகள், தூண்கள் என 132 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக ரன்வீா் ஷா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தான் குஜராத்தில் இருப்பதால் புதன் கிழமை ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று ரன்வீா்ஷா தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்துள்ள சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர், வரும் 9ம் தேதி (நாளை) ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனா். இதே போன்று ரன்வீா் ஷா தோழி கிரண் ராவ் வீட்டில் இருந்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கிரண் ராவ் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய 7 போ் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages