சபரிமலை விவகாரம்-அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - Agnipuratchi

சபரிமலை விவகாரம்-அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Share This

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட அந்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்த வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. மேலும், மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் படியும், அங்கு வழக்கு பட்டியலிட்ட பின்பு அதன்மீது விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages