கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் - Agnipuratchi

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

Share This

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தத்தில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசை படகுகளில் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். அப்போது 8 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்கக்கூடாது எனக்கூறி எச்சரித்ததோடு, படகுகளில் ஏறி, வலை, மீன்பிடி சாதனங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியதோடு ஏற்கனவே பிடித்திருந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர். 'இங்கிருந்த செல்லாவிடில் சிறை பிடிக்கப்படுவீர்கள்' என்று இலங்கை கடற்படை மிரட்டியதால் மீனவர்கள் கரைக்கு திரும்பியுள்ளார்கள். மேலும், "எங்கள் வாழ்வாதாரமே இது போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்று மீனவர்கள் மிக வருத்தத்துடன் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages